Saturday, March 28, 2009

வாங்கோ ... வாங்கோ .... !

முகப்பு
Welcome To Orangeville… Population 364630…என்றிருந்தது ... 64வயதாய் நான் உள்ளே நுழைந்தபோது ஓர் அமைதியான புறநகரின் பெருவயல்களும், சின்ன வீடுகளும் ,சிதிலமான கட்டடங்களும் ,தென்றலும் என்னை குறுகுறுவென பார்ப்பதை உணர முடிந்தது. நல்வரவு என்ற முகப்பில் கிடந்த சதுர கார்பெட் தூண்டில் , அவன் மழையில் நனைந்த , செஞ் சாயமாய் சேறு வழிந்த செருப்புகளை கழற்றி விட்டு உள்ளே நுழைந்தபோது , பாதங்களிலிருந்து வழிந்த மழை நீரும் உள்ளே போக ஆரம்பித்தது . எதையும் முன் பின்னாக மாற்றிப்போட்டு கொள்ளுங்கள் . எதுவாயினும் உங்களுக்கு நல்வரவு சொல்வதே நோக்கம் . சரி ...சரி.. வாங்கோ... நல்வரவாகட்டும் .


வாசல்

இதில் தயங்க ஏதுமில்லை. திறப்பிருக்குது ... இல்லையா ? அதனால் ஏதும் ஆகபோவதில்லை. கண்ணை மூடிக்கொள்ளுங்கள் ... கைகளை அகல விரித்துக் கொள்ளுங்கள் ... ஜி பூம்பா ... திறந்திடு சீசேம் ... சொல்லுங்கள் .... சொல்லிவிட்டீர்கள ?. பிறகென்ன ?.. உலாப்போக தயாராகுங்கள்..

அறிமுகம்
பத்திரமான இடத்தில் உங்களோடு அறிமுகம் செய்துகொள்ள விரும்பினோம் .!
















0 comments: